முதிர்கன்னி....

எனக்கான பதிவுகள் அனைத்தும்
காலந்தாழ்த்தியே களவாடபடுகின்றன..

எப்பொழுதும் நடத்தப்படும் நாடகத்தில்
ஒப்பனைக்கும் ஒப்புக்கும் நடப்பதே
வாடிக்கை ஆகிப்போகிறது ...

அப்பாவின் பெருமூச்சும் அம்மாவின்
விசும்பல்களும் ஊராரின் உச்சுகொட்டலில்
உயிர்விடுகின்றது என் உணர்வுகள்...

வெற்று சுவற்றில் எழும்
வேதனை அலைகளில் கனவு
கூம்புகளில் அனுப்பிவிடும் கெட்டிக்காரி...

எனக்கு நானே கூறிகொள்ளும்
சமாதான வார்த்தைகளில் ஓன்று
கல்யாண மேடையில் முதிர்கன்னியின்
தாரம் இரண்டாம் எண்ணிக்கையில்...

எண்ணிக்கையின் இடைவெளி உயரும்போது
இறுக்கங்கள் தளர்ந்து விடுகின்றன
சுருக்கங்களை கணக்கிடும்போது...

எப்பொழுதாவது எழும் அனுதாப
அலையில் அடங்கிபோக மனமில்லை
ஒடுங்கிப்போன அப்பாவும் உடைந்துபோன
அம்மாவும் ஆளாய் பறந்ததில்
அடங்கிபோனேன்....

மேடையில் மீசை முளைத்த
குழந்தையின் முன்னிலையில் அட்சதை...

எழுதியவர் : சுபகூரிமகேஷ்வரன் (எ) skmaheshwaran (23-Apr-12, 12:17 pm)
பார்வை : 293

மேலே