நிறைவுற விழைக...!
சிந்தை நேர் செய்தாங்கே
நக்கினம் நவில்ந்தெடுத்து
புல்லினம் போலத் திரிவாய்
எண்திசை என்பதுவே
எந்தசைக் கட்டும் கயிறு
எல்லையே யாதுமில்லா
வெளி நோக்கி நரலிக்கதறு..
விண்டதாய் விதிர்த்தாய்ப் பாதி
உண்டதாய் உதிர்த்ததாய்ப் பாதி
கொண்டதாய்க் கொன்றதாய் பாதி
பூவுடல் கொண்டிங்கு
பூமியில் நின் வாழ்வு
பாதியில் புரையோடிப்போய்
மீதிகள் நனிந்தனவே........!
நிறைவுற யாது செய்க.....?
நவின்றதை நினைவில் கொள்க.....!
எதிலுமே பொய்மைத் தேடி
மெய்மையை அகழ்ந்தெடுக்க
நீ என்பது மட்டும் நிஜம்.....
அன்றி இப்பேரண்டமே மாயை.......!
மாயை என்றொரு
மந்திரச் சொல்லின்
பொருள் யாதென புரிபட விழைக....
கால நேர ஓட்டங்கள்
நேர்க்கோடு என்பதுவே
மானுடந்தன் ஆறறிவு கொண்டு
அகழ்ந்தெடுத்த பொய்க் கூற்று.....
காலமென்பது சுழலெனக் காண்.....

