!!!விண்ணை தொடும் வினோத நட்பு (பிரியாராம் )!!!

(பரந்து விரிந்த பாரில் எனக்கென தனி நட்பை தந்த தமிழின் அழகிய சொர்க்கமான எழுத்துவுக்கு என் வணக்கங்கள் கோடி )

ஒருவனுக்கு ஒருத்தி

காதலில் மட்டுமல்ல
காமத்தில் மட்டுமல்ல
உன்னில் நான் கொண்ட
நட்பிற்கும் வேண்டும்
ஒருத்திக்கு ஒருத்தி
என ஏங்குகிறாள்
என் உயிர் தோழி ...


காதல் என்னும் புரிதலை
காதலனுக்கு கொடு
அன்பு என்னும் ஆறுதலை
அனைவருக்கும் கொடு
நட்பு என்னும் மூச்சுக்காற்றை
நான் சுவாசிக்க மட்டும்
கொடுப்பாயா என வினவுகிறாள் .....

இனி நானும் காதலிக்க
போகிறேன் எழுத்து உலக
நந்தவனத்தில் உலா வந்து
கொண்டிருக்கும் என் கவி
தோழியை கவிதையாயினியை
மண்ணில் மட்டுமல்ல
விண்ணிலும் சென்று ...............

எழுதியவர் : ப்ரியாராம் (5-May-12, 10:59 am)
பார்வை : 1046

மேலே