காதல் படுத்தும்பாடு
உன்னை நினைத்துக்
கவிதைகள்
எழுதி எழுதியே
கரைகிறது
என் காலம்...!
வலி கொடுத்த
பிறகும்
சுமையாக
எண்ணாமல்
சுகமாகவே
நினைத்து
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்...!
நான் சிந்தும்
கண்ணீர் தான்
உனக்கு
சந்தோசம் தருகிறதென்றால்
உனக்காக
என் ஆயுள்
முடியும்வரை
அழ நான் தயார்
என் அழுகையை
ரசிக்கவாவது
கடைசிவரை
நீ என்னோடு
வேண்டுமடா...!
விளையாத நிலத்தில்
பயிரைவைத்துக்
கொல்வது போல்
புரியாத
உன்
உள்ளத்தில் என்
உயிரை வைத்து
துன்பப்படுகிறேன்...!
என்னை வேண்டாம்
என்றாவது
சொல்லிவிடு
இன்றோடு நான்
செத்துவிடுகிறேன்...!