திருமண வாழ்த்து

மணல் வீடு கட்டி .....
இருபுறம் வாசல் தோண்டுகையில் ...
இருவர் கை இணையும் நொடி....
ஒரு "சிலிர்ப்பு"...!
மரங்களடர்ந்த சாலையில்....
நடக்கும் நேரம் .....
ஒரு பூ உச்சந்தலையில் விழுமே....
அது ஒரு "சிலிர்ப்பு"...!
பேருந்து பயணத்தில்....
எதிர் இருக்கை குழந்தை.....
பார்த்து பார்த்து சிரிக்குமே....
அது தனி "சிலிர்ப்பு"...!
குட்டி ஆடு தவ்வி தவ்வி ஓடி...
மருண்டு போய் ஒரு பார்வை பார்க்குமே...
அடடா ...என்ன ஒரு "சிலிர்ப்பு"....!
கவிதை பிரசவிக்கும் நேரம்....
கவிஞ்ன் தேகம் முழுவதும் பரவுமே....
என்ன ஒரு "சிலிர்ப்பு"...!
இரு தேகம் இணையும் நேரம் ...
இருவருக்கும் நிகழுமே.....
யப்பா....என்ன ஒரு "சிலிர்ப்பு"....!
சிலிர்ப்பான நிமிடம் எல்லாம்....
நம் வாழ்வின் சிறப்பான நிமிடங்கள் தான்....!
காரணம்.......?
நாம் அந்த நேரம் "நம் நினைவில்" வாழாமல்....
நம் வாழ்வில் "முழுதாய்" வாழ்ந்திருப்போம்...!
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல்....
மற்றவர் "வார்த்தையில்" உங்கள் .....
வாழ்வை தொலைக்காமல்.....
உங்கள் வாழ்வில் ......
சந்தோசமாய் வாழ வாழ்த்தும்.....
உங்கள்........
நட்பு!

(என்னை பொறுத்தவரை விட்டு கொடுத்தல் என்பது ஒரு ஏற்றத்தாழ்வை உண்டாக்கும் செயல்
எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதுவே சரியானது என்று ......)


எழுதியவர் : (24-Sep-10, 7:01 pm)
சேர்த்தது : RAMAR
Tanglish : thirumana vaazthu
பார்வை : 718

மேலே