மாற்று கருத்துடையவள் மனைவி

--- மாற்று கருத்துடையவள் மனைவி ----

உலகை உலுக்கியெடுக்கும்
பகுத்தறிவு சொற்பொழிவுக்கு
வகுத்து வகுத்து
வார்த்தைகளை சரமாக்கி
கோர்த்து கொண்டிருக்கையில்
"கோவிலுக்கு சென்று வருகிறேன்" என்ற
மனைவின் கோரிக்கையை
மறுக்க முடிவதில்லை.

அவள் சுதந்திர சிறகுகள்
முறிந்துவிடகூடாது என்கிற
முழு கவனத்தில்
சூழ்நிலை கைதியாக
சும்மாதான் வைத்திருக்கிறேன்
என் சுயமரியாதை சுத்தியலை.

அவளின்
பைத்திகார பக்தியை
பார்க்கிறபோது
இறைவன் என்ற ஒருவன்
இருந்திருக்கலாம் என்றே
தோன்றுகிறது.

--- தமிழ்தாசன் ---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (18-May-12, 11:56 pm)
சேர்த்தது : தமிழ்தாசன்
பார்வை : 220

மேலே