புரியாத வாழ்க்கை (பகுதி - 4) - பெற்றோர்-பிள்ளைகள் கவனத்திற்கு

குழந்தையின் முதுகில் மூட்டை வைக்கிறான்
அதிகமதிப்பெண்கள் எடுஎடுயென
சாவிதொடுத்து ஓடவைக்கிறான்
இடையில் மூச்சுவாங்க நின்றால்,
ஓடுயென முதுகில் ஒருபோடு வைக்கிறான்
அதுமட்டுமில்லாமல்,
இடையிடையே
வாழ்க்கை ஒரு வட்டம்,
வாழ்க்கை ஒரு சட்டம் - என பாடி பூட்டிவைக்கிறான்
வளர்ந்தபிறகும்,
மனனம்செய்த மழலைபோல்.....
மீண்டும்,
வாழ்க்கை ஒரு வட்டம்,
வாழ்க்கை ஒரு சட்டம் யென
தனக்குத்தானே சாவி கொடுத்துக்(கொல்)கிறது.....

(எங்கு சென்று சொல்வது, தற்கொலை என்பதை அறியாது தற்கொலை செய்துக்கொள்கிறான்)

போதுமடா சாமி.......
வட்டத்திலிருந்தே வட்டமிடுங்கள்
சட்டத்திலிருந்தே சட்டமிடுங்கள்
வாழ்க்கையையும் அவ்வாறே முடித்துவிடுங்கள்
- இதுதான் வாழ்க்கை என்றால்,
என்னைப்பொருத்தவரையில்,
அவன் உயிர் இருந்தும், வாழவில்லை என்பேன்.

-A. பிரேம் குமார்

எழுதியவர் : A பிரேம் குமார் (19-May-12, 12:50 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 197

புதிய படைப்புகள்

மேலே