26.5.12-போகிற போக்கில்..! பொள்ளாச்சி அபி.

நாடாளுமன்றக் கூட்டம் கடந்த மே.22.ல் முடிந்தது.அடுத்த 24 மணிநேரத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை மதிக்காமல்,பொதுமக்களைப்பற்றிக் கவலைப்படாமலும்,இதுவரை இல்லாத அளவில் ரூ.7.50.ஐ பெட்ரோலுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் ஒரு லிட்டர்.ரூ.78,பாகிஸ்தானில் ரூ.59.பங்களாதேஷில்.ரூ.43.40,சீனாவில்.ரூ.37.
இலங்கையில்.ரூ.61.70,அமெரிக்காவில்.ரூ.39.50 என்ற விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
நமது நாட்டில் விற்கப்படும் பெட்ரோலின் விலையில் பாதிக்குமேல் பொதுமக்களால் செலுத்தப்பட வேண்டிய வரிகள் ஆகும்.!
நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் வரிகள் செலுத்தத்தான் வேண்டும்.அப்போதுதானே வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளமுடியும்.? நியாயம்தானே.?
வளர்ச்சிப் பணிகள் என்றால் விவசாயம் வளர,
தொழில்துறை வளர,மக்களுக்கான துறைகள் சார்ந்த அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவும் வகையில் நாம் வரிகள் செலுத்தத்தான் வேண்டும்.அதில் ஒரு இந்தியன் என்ற அளவில் நமக்கு எந்த வெறுப்பும் இல்லை.
சொந்த நாட்டின் முன்னேற்றத்தை விரும்பாதவர்களா நாம்..? வரிகள் செலுத்தத்தான் வேண்டும்.!
அதெல்லாம் சரிதான்..
ஆனால்,பெட்ரோல் நிறுவனங்களுக்கு கடந்த 2010.லிருந்து,ரூ.21.லட்சம் கோடி ரூபாய் என்ன..க்கு மானியம் தருது இந்த மத்திய அரசு.!
இந்த மானியத்தொகையினால் லாபம் அடைந்தது இந்திய மக்களா.?.மானியத்தொகையின் அளவுகள் கோடிகளில் உயரவேண்டும் என்பதற்காகவே செயற்கையாக பெட்ரோல் விலையும் உயர்த்தப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியாதா.?.

--கால் உரைந்தால்
காயம்பட்டு விடுகின்ற
கட்டிதட்டிப்போன கட்டாந்தரையும்..,
என்நாட்டு விவசாயிகளின்
கால்பட்டு கைபட்டு..
கழனியாச்சு பாரேன்..!

மண்ணுக்கேத்த விவசாயம்னு
விஞ்ஞானிபோல சிந்திச்ச அவன்
விளைவிச்சதெல்லாம்
பொன்னா விளைஞ்சது பாரேன்..!

அவனேஏரோட்டி அவனேபாடுபட்டு
களைகளையே ஒதுக்கிவிட்டு
கண்ணைப்போல விளையவெச்ச
நெல்லுக்கானாலும்..
கரும்புக்கானாலும்..
காய்கறிக்கானாலும்..

தான் பாடுபட்ட கூலிக்கென
தன்பாட்டை நடத்திச்செல்ல
விலையெதுவும் வெக்கமுடியாத
நிலைமை இன்னும் நீடிக்குதே

ஆனால்..,

பன்னாட்டு,உள்நாட்டு
கார்ப்பரேட் கம்பெனிகள்
தன்உற்பத்திப் பொருட்களுக்கு
விலைநிர்ணயம் செய்யும்
உரிமையும் இருக்குது பாரேன்.!

மொரீஷியஸ் தீவு வழியா நீ
எதைக் கொண்டுவந்தாலும்
வரிவிலக்கு உனக்குண்டு.
அதை இந்தியாவில்
நான் வாங்கினால்
இரட்டைவரிவிதிப்பும் உண்டு.!

அட எத்தனைதான் சுமையைத் தூக்கி
இந்தியன் மேல் வெச்சாலும்
நல்லா இவன் தாங்குறாண்டா.
இவன் பெரிய பணக்காரன்..னு
அயலவனெல்லாம் நினைக்குறான்.
அதுதான் நாளும் விலையைக்
கூட்டுறான்..லாபம்
நிறையப் பாக்குறான்.!-

எழுதியவர் : பொள்ளாச்சி அபி. (26-May-12, 6:40 pm)
பார்வை : 220

மேலே