எங்கள் வீட்டின் எலி பிடிக்கும் திருவிழா

விடுமுறை என்றாலே
தாத்தா வீடுதான்!

மின்சாரம் இல்லாமல்
பாட்டில் விளக்குகள் மின்ன
தாழ்வாரத்தில் தாத்தா பீடி
புகைப்பதை தாண்டிப்போக
மனமின்றி நிற்ப்போம்!

சோளம் அறுத்தபின்
வீட்டில் எலிகளுக்கு
கொண்டாட்டம்தான்!

முற்றத்தில் விரட்டினால்
சமயலறயில் பாத்திரம் உருளும்!
பாவம் அந்த பத்தாம்பசிலி பூனைதான்
என்ன செய்யும்!

சந்தையில் இருந்து மாமா
வாங்கிவந்த எலிப்பொறியில்
கருவாடு கமகமக்கும்!

மாறிமாறி பொறியில்
எலிகள் சிக்கும்!
மஞ்சள் பையில் எலியை விட்டு
கொடுப்பார் எங்களிடம்!

பத்திரமாய் கொண்டுசென்று
விடுவோம் தெருமுனையில்!
இப்போதெல்லாம்
எலிப்பொறிகளையும்
காணோம் எலிகளையும் காணோமே!

எழுதியவர் : சரவணா (31-May-12, 5:42 pm)
பார்வை : 208

மேலே