இதுதான் முட்டை

என்னுடைய பெண்
முட்டைப் பிரியை.
முட்டை வாங்கி
வந்தேன்.
அதைப் பார்த்ததும்
இதுதான் முட்டை
என்றாள்.அதற்கு நான்..
இதுதான் முட்டை
வேறென்ன என்றேன்.

அவள்..

எங்க விடுதியில்
பெரிய முட்டை
போடுவாங்க..
ஆனால்.. இதுதான்
முட்டை மாதிரியிருக்கு..
அது ஒரு வேளை
வாத்து முட்டையா
இருக்குமோ !என்றாள் .

என்ன ! எல்லாம்
கோழி முட்டைதான்
வெவ்வேறு
சாதிகள் இதற்குமா!
என்று
அதிர்ச்சியானேன் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-Jun-12, 10:55 pm)
Tanglish : ithuthaan muttai
பார்வை : 298

மேலே