பட்டப் பெயர்

அவள்
நேற்று வரை
'கிறுக்கி' என்ற
பட்டத்தோடுதான் !

எல்லோரும் அவளை
அழைப்பது
'கிறுக்கி' என்றுதான்.

அவள் பெயர்
கிருகுஜம். ஆனால்..
அவளைக் 'கிறுக்கி'
என்றே அழைப்பர் .

அதன் அர்த்தம்
அவளுக்குப் புரிவதில்
ஞாயமில்லை!
பெயரைச் சுருக்கி
வந்த காரணம்..

வெகுளித் தனத்தோடு
அதனையும்
ஏற்றுக் கொண்டாள்
பட்டப் பெயராக!

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-Jun-12, 11:08 pm)
பார்வை : 216

மேலே