உணவே மருந்து

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
காலையில் எழுந்ததும் பல் தேய்த்து விட்டு
தேநீருக்கு பதில் ....கஷாயம் குடிக்க வேண்டும் .

காலை உணவாக இட்லி பூரிக்கு பதில்
கொள்ளு இட்லி,உளுத்தங்கஞ்சி,முடக்கத்தான் தோசை ...சாப்பிட வேண்டும்

மதிய உணவாக சோறு,சாம்பார்,ரசத்துக்கு பதிலாக
ஆவாரம்பூ சாம்பார்.சோற்றுக் கற்றாழை குழம்பு பிரண்டை துவையல் மூலிகை மோர் சாப்பிடவேண்டும்

மாலையில் தின்பண்டமாக பாவ்,பன்,பஜ்ஜி,வடைக்கு பதிலாக
சுக்குமல்லி காபி, மூலிகைசுப்பும்
சாப்பிடவேண்டும்

இரவு உணவாக இட்லி தோசைக்கு பதிலாக கொள்ளு தோசை,புதினா சப்பாத்தி சாப்பிடவேண்டும்

என்ன படிக்கவே கண்ணைக் கட்டுதா?

இதெல்லாம் நீரிழிவு நோயாளிக்கு கண்ணு பயந்துடாதிங்க !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 5:14 am)
பார்வை : 914

மேலே