பெண்

இணையத்தில் படித்ததை கீழே மொழிபெயர்த்துள்ளேன்.

-From the day one..
she becomes apple of her father’s eyes…
Her silent tears do wonders..
and Dad agrees to do on what he said a big 'No' earlier..! :)

-She can walk in style all day long without looking tired...:D

-She burns her hand....while learning cooking for you..but never complains...:(

-She can cry all night, but the next morning when her eyes are red..
its just because mascara hit her eyes.. =)

-She Likes to be called "Angel" or "Princess" or "Baby"…

-She will drop a lot of hints to tell you that she Loves you
But she won’t come say it directly..

-When a guy says something really sentimental,
She will remember it forever.. :)

-When a girl cooks for you.. You know..?
You mean a lot to her..

-She feels Honored.. when You ask her Advice.. =)

-She feels Shy.. when you look at her Silently.. =)

-She feels Protective when she is dependent on you..

-she is expected to seal her Words …
to crush her emotions… to stop her tears..
and to have a big smile on her face.. no matter she is crying hard inside.. =(


-She is one.. who is treated as a Princess in her Parent's House,
when she gets Married.. She leaves every thing behind..
her Parents, their Love.. her Room..
she adopts your family Values.. even your family name..
She calls your mother "Mum"... and your father "Dad" :)

love her..... because so many love her but she chooses to love you.....

Do you have someone so special in your lives too..?
-------------------------------------------------------------------------------

------ பெண் ---------

அவள் பூமியில் பூத்த நாள் முதலே
தேயும் அப்பாவின் கண்களுக்கு
தேவதையாகிவிடுவாள்.

அழுத்தமாக முடியாது என்று
அப்பா ஆணையிட்ட பிறகும்
மாயங்கள் செய்யும்
மைவிழிகள் பெய்யும் - அவள்
மௌன கண்ணீர் துளிகள் கண்டு
மறுத்து நின்றதை
மகளின் மகிழ்ச்சிக்காக
செய்திடுவார் அப்பா

இளைப்பாற இடையில் மரம்
இல்லாமல் போனாலும்
சிரமம் பாராமல்
சீனப் பெருஞ்சுவரையும் கடந்திடுவாள்.

அறியாத சமையல் நீ பசியாற கற்றிடுவாள்
ஆறாத தீ காயம் பூ கையில் பெற்றிடுவாள்
சதை பொசுங்க துடித்திடுவாள் வலியில்
அதை கசியாமல் காத்திடுவாள் வெளியில்.

சிணுங்கி அழுது அழுதே
இவள் இரவுகள் முடிந்திருக்கும்.
சிவந்த கண்களுடனே
காலைப் பொழுது விடிந்திருக்கும்.
விழி சிவந்ததன்
விபரம் கேட்டால்
கண்மை இடும்போது
காயம் ஏற்பட்டதாய்
காரணம் சொல்வாள்.

இளகிய இளவரசி
அழகிய தேவதை
பழகிய குழந்தை என
செல்ல பெயர்கள் சூட்டி
கூப்பிட வேண்டும் அவளை
அவள்தான்
நிலவை நிரப்பிய குவளை.

உள்ளுக்குள் உன்னை நேசிப்பதாக
சொல்லாமல் சொல்லிடும்
அவளொரு சின்னசிறு பிள்ளை.
காதலை பட்டென்று சொல்ல
பாவையவள் இன்னும்
பாசாங்கு பழகவில்லை.

காதல் வார்த்தை கலந்து மிருதுவாய்
காதின் ஓரம் நீ பேசும் எதையும்
காலம் முடியும்வரை எண்ணி அதையும்
மறக்காதிருக்கும் இந்த கன்னி இதயம்.

அறிந்து கொள்ளட
அக்கறையோடு அவள்
அடுப்பங்கரையில் நிற்பதே
அகிலம் நீ என்பதன் அர்த்தம் தானே !

அவள் தரும் ஆலோசனைகளுக்கு
நீ கவனம் கொடுத்தால்
பக்கம் உள்ளதாக உணரந்திடுவாள்.
நீ வீசும் பார்வைகளுக்கு
வெட்கம் வந்து குனிந்திடுவாள்.

உன் தோல் மீது சாய்கிற போது
கருவறைக்குள் கண்ணயர்வது போல
கற்பனையில் இருந்திடுவாள்.

கசியும் கண்ணீர் சிந்தாமல்
கதவிட்டு கொள்வாள்.
அருவியென கொட்டும்
உணர்ச்சிக்கு
அணையிட்டு கொள்வாள்.
அட
வார்த்தைகள் ஊமையின்
உடலாகும்.
அழுது அழுது உள்ளம்
கடலாகும்.

திருமணம் காணும் முன்னே
பெற்ற வீட்டுக்கு
ஒற்றை தேவதையவள்.
திருமணம் கண்ட பின்னே
புகுந்த வீட்டுக்கு
தகுந்தபடி வாழும் தெய்வம் அவள்.


உன் தாயை அம்மாவென்று
உன் தந்தையை அப்பாவென்று
அழைத்து சாகும்வரை மகிழ்ந்திருப்பாள்.

உன்னோடு புது உயிருற்று
உன்னோடு பல துயருற்று
மண்ணோடு போகும்வரை இணைந்திருப்பாள்.


பூக்களோடு ஆயிரம்
புத்திரர்கள் காத்திருந்தும்
பூமியில் நான் வாழ
நீ மட்டும் போதுமென
உன்னை
தேடி வந்த தேவதையவள்.

அன்னைக்கு மாற்றாக அவளையும் நேசி
என்றைக்கும் காற்றாக அவளையே சுவாசி

மொழிபெயர்ப்பு
தமிழ்தாசன்

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (3-Jun-12, 6:33 am)
பார்வை : 317

மேலே