விவசாயியே வீரமுழக்கமிடு!!!!!

என் மானிட சமூகமே
ஒரு நிமிடம் சிந்தி,
ஆம் விவசாயிபற்றி சிந்தி .....
ஒவொரு விவசாயியும்
தெய்வத்தின் தூதன்,
அவன் உறக்கத்தில் கூட
உழுதுகொண்டு இருப்பவன்!
வானம் பொய்த்தாலும்
வர்ணபஹவானிடம் நீதிகேட்க
ஒருபோதும் மண்டியிடமாட்டான்!
பதிலுக்கு அவனுடைய
ஓயாத உழைப்பாலே
வர்ணபஹவானின் ஆருயிர்
காதலியை கரம் பிடிப்பான்.
தன் வயிறு காயிந்தாலும்
பிறர் வயிறு செழிக்க போராடுபவன்.
எந்த விவசாயும் எமாதுபவன் அல்ல.
பதிலுக்கு ஏமாறுபவன்.
படித்த பரிதரசிகள் பலர்
அரசாங்க ஊழியனாக இருந்துகொண்டு
அசிங்கமே இல்லாமல் அரக்கன்கலாக
கைநாட்டு விவசாயிடம்கூட
கையேந்தி பிச்சை கேட்கின்றான்
லஞ்சமாக,
விவசாயின் துயரத்தை
துச்சமாக கருதி லஞ்சம்வாங்கும்
இதயம் செத்த சாதங்களுக்கு
நரகத்தில் தூக்கு கயிறு
தொங்குவது தெரியாது
பாவம் அந்த கோமாளிகளுக்கு!!!!
எவன் விவசாயியை
அவமதிக்கின்றானோ அவன்
என் தேசத்தின் துரோகி!
சோற்றில் கைவைக்கும்போது
ஒருநாளேனும் விவசாயிகாக
வணங்காதவன் இதயம் செத்த நடைபிணம்
சாதாரண தண்ணீர்காக
பந்தாவாக பணத்தை
எடுத்து நீட்டும் கோமாளிகள்
இரவு பகலாக பசுவை பராமறித்து
பாலைவாற்கும் விவசாயிக்கு
பத்து பைசா உயர்த்தித்தர
உயிரைவிட்டு கூப்பாடு போடுகின்றன.
ஒ! விவசாயியே
நீ ஏமாளியாக இருக்கும்வரை
உன்னை ஏமாத்த அரசியல் வர்க்கமும்
அதிகார வர்க்கமும்
உன்னை சுரண்டி தின்னத்தான் செய்வார்கள்!!!!
பொருத்தது போதும்!!
இனியும் நீ ஏமாந்தால்
உந்தன் பிள்ளைகளின்
அழுகுரல் தான் உன் இதயத்தில் எதிரொலிக்கும்.
இனியாவது போராட துணி.
புரட்சி என்ற எழுத்தை உச்சரிகவாவது செய் .
உந்தன் உழைப்புக்கு தெய்வம் தலைவணங்கும்!!
ஆனால்,இந்த சமூகம் தலைவணங்காது .
அது நிஜம்!! நீ இனியும் போராட தயங்கினால்
நீதி தேவதைகூட
உன்மீது கோபம் கொள்வாள்.
இனி புரட்சி என்ற முழக்கமே
உன்னை பாதுகாக்கும்.
இனி எந்த சட்டமும்
எந்த அரசாங்கமும் உன்னை ஒருபோதும்
மதிக்காது,பதிலுக்கு மிதிக்கும்.
புரட்சி புரட்சி என முழங்கு!!!
உன்னிடம் தான் நாடி அச்சாணியே உள்ளது.
உன்னை முதலில் அறி!!!
உண்பலத்தை அறிந்து துணிந்து நில் .
அச்சாணி இல்லா வண்டி ஓடாது.
விவசாயியே நீ இல்லாமல்
இந்த உலகம் இயங்காது.
ஆம்! அது தான் உந்தன் பலம்.
உந்தன் பலத்தை உணர்.
உன்னிடம் சீற்றம் இல்லாதவரை
சீர்திருத்தம் கனவிலும் வராது!!
சீற்றம் இருக்கும் இடம் சீர்திருத்தம் வரும்
புரட்சி இருக்கும் இடம் புதுமை உண்டாகும்
எழுச்சி இருக்கும் இடம் ஏற்றம் இருக்கும்
மாற்றம் இருக்கும் இடம் மகிழ்ச்சி கூத்தாடும் !!!
விவசாயியே வீர முழக்கமிடு
விண்ணதிரும்வரை முழங்கு!!!
உந்தன் முழக்கம் இடியாய்
விழட்டும் ஆள்வோர் இதயத்தில் !!!
அந்த இடித்தான் உந்தன்
ஏக்கத்திற்கு கல்லறை கட்டும்!!
ஆம் உந்தன் ஏழ்மைக்கும் கல்லறை கட்டும்....
வந்தே மாதிரம்!! ஜெயஹிந்த்!!!

எழுதியவர் : எம்.எஸ்.சாஸ்திரி (7-Jun-12, 10:43 am)
சேர்த்தது : M.S.SASTRI
பார்வை : 202

மேலே