ஒப்பில்லா உழவு (கவிதை திருவிழா பங்களிப்பு)
வகை வகையா
காய்கறிய சமச்சுதறாங்க
அது வீடு வந்த கதையை
நீங்க தெரிஞ்சுக்கங்க ...
வயிறு முட்ட
சாப்பிடுறோம் உக்காந்து
வாய் கிழிய பேசுறோம்
விலை கூடிப்போச்சுன்னு ...
அட
சொல்லுறேன் கேளுங்க கொஞ்சம்
காய்கறி கதைய நீங்களும் ...
சும்மா
இருக்கும் நிலத்த உழுது
விதைய போடணும்
அந்த
விதைய போட்ட பின்னே
தண்ணி ஊத்தணும்
கம்மாங்கரை
தண்ணி கொஞ்சம் கூடி போச்சுனா
அந்த
செடியும் கொஞ்சம் அழுகி போகும்
தன்னால தான்
புழு பூச்சி
வந்துடாம மருந்து போடணும்
அதில் வளரும் தேவை இல்ல
செடிய பிடுங்கி போடணும் ...
அட
சும்மா காயும் காய்க்காது
அதுக்கு
இயற்கை உரம் போடலேனா
சதிருக்காது
சத்துள்ள
காய்கறி கிடைக்க
நல்லா உழைக்கனும்
இந்த
உழவோட மகத்துவமும்
தெரிஞ்சிடிச்சா
இது
என்றுமே ஒப்பில்லாதது
புரிஞ்சிடுச்சா
உழவுக்கே
என்றும் நாம வணக்கம்
சொல்வோம்
என்றே
கூறி ஏன் கதைய நானும்
முடிச்சுக்குறேன் ....