கரடி பொம்மை!

இந்தக் குழந்தைகள்தான்
எவ்வளவு
பெரிய மனம் கொண்டவர்கள்?
நேற்றுதான்
நைய புடைத்தேன்
எதிர்வீட்டு மீனுக்குட்டியை...
எங்கள் வீட்டில்
தொலைகாட்சிப்பெட்டியின்
மேல் விளிம்பில் இருந்த,
கண்ணாடியால் ஆன,
நடனமாடும்
ஒரு சின்ட்ரெல்லா பொம்மையை
போட்டு உடைத்ததற்காக...
இன்று வந்து
என்னிடம் சமரசம் பேசுகிறாள்.
"இந்தா மாமா,
என்னுடைய கரடி பொம்மையை
வெச்சிக்கோ,
இதற்கு நடனம் தெரியாது. ஆனால்,
இதுவும் ஒரு
நல்ல பொம்மைதான் மாமா"
என்று என் கண்ணில்
கண்ணீரை வரவழைத்து முடிக்கிறாள்.

எழுதியவர் : அக்னிபுத்ரன் (9-Jun-12, 2:02 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 190

மேலே