என்ன தான் உன் பிரச்சினை... ( சமுக அவலங்கள் கவிதை போட்டி )

நெஞ்சோடு திறம்கொண்டு
புயலோடு போரிடும் பொழுதுகள்
எனக்கு வாய்த்ததில்லை...!
நம் சமுக அவலங்களால் பின்னப்பட்ட
நான் தென்றலுக்கே தோற்றுப்போகும் ஊமத்தம் ஜாதி...!

சூரியன் ஒளிக்கீற்றுகள்
எனை சுட்டுவிடும்
என்ற கவலையில்லை...!
ஏன் என்றால் சமுக அவலங்களால் பின்னப்பட்ட
நான் நிலவொளிக்குள் முடிந்துவிடும் அந்திமந்தாரை...!

பிரபஞ்சத்தை அளவெடுத்து
பூக்களோடும் முட்களோடும்
யுகம் வாழ நினைத்ததில்லை...!
ஏன் என்றால் நான் சமுக அவலங்களால் பின்னப்பட்ட
ஆதவனுக்குள் ஆயுளை முடிக்கும் பனித்துளி...!

எனக்கும் சிறகுகள் உண்டு பறப்பதற்கு
ஆனால் ஆகாயம் தொடும் வரமில்லை
ஆண்டுகள் வாழ ஆசைதான்...
சமுக அவலங்களால் பின்னப்பட்ட
நான் நாளுக்குள் பிறந்து நாளுக்குள் மடியும் ஈசல்....

ஒன்பது ஓட்டைகளை வைத்துக்கொண்டு
வெளியேற காத்திருக்கும் உயிரை
அடைத்து வாழும் உயிரினம்...!
சமுக அவலங்களால் பின்னப்பட்ட நிலையில்லாத
இந்த உலகில் ஆயுளை முடிக்க பயணிக்கும் மனிதன் நான்...!

சமுக அவலங்கள் என்று என்னால் சொல்லப்பட்ட விடயங்கள்
நம்மை சுற்றி நம்மால் பின்னப்பட்ட சிரங்கு வலை..
அரசியல் சாக்கடையில் ஊழல் பெரிச்சாளிகளால்
மானிட மக்களின் உடலை மனசை புண்ணாக்கும் வீண் சிரங்குகள்..

இன்றைய தேவை நிலையான ஆட்சி இல்லை..
நேர்மையான ஆட்சி..
குடியை ( டாஸ்மார்க் ) கொடுத்து குடியை கெடுக்கும்
கேடு கெட்ட எண்ணம் கொண்டவர் அகல...
தேவை ஒரு புரட்சி..

பாரத தாய் நம் நாட்டில் உள்ள ஒரு தாயின் ரூபத்தில்
நமக்கு ஒரு சே குவாராவை தரமாட்டாளா !!!!
சமுக அவலத்தை களைய இன்னொரு அம்பேத்கர் வரமாட்டாரா !!!


ஏக்கத்துடன்....
கலிபா சாஹிப்

எழுதியவர் : கலிபா சாஹிப் ( நன்றி.. திரு (10-Jun-12, 5:50 pm)
பார்வை : 684

மேலே