சமுக அவலங்கள் (4 ) (கவிதை திருவிழா)
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்தமிழர்!
வளர்க டாஸ்மாக் ப்ராந்தியோடே!
எங்கெங்கு நோக்கினும் பார்கலாட
தமிழன் குடிக்கு பேர்போன
வீனனட!
காந்தி பிறந்த
தினத்தில் கூட
பாட்டில்
விற்பனை குறையவில்லை!
நாளை கடை
விடுமுறை என்றால்
இன்றே
வாங்குவோர்
எண்ணிக்கை குறைவுமில்லை!
திருமலை தரிசனம் சுலபமில்லை!
சனிக்கிழமை சரக்கு வாங்குவதும்
அவலவொன்றும் எளிதுமில்லை!
படித்தவன், பாமரன்
பேதமில்லை!
ரெண்டு ரவுண்டு உள்ள விட்ட
நாத்திகனும் ஆத்திகனும்
வேறுஇல்லை!
வெள்ளை சரக்குக்கு
ஒன்பது மணி எல்லை!
கருப்புச் சரக்குக்கு
காலம் நேரம் இல்லை!
அதைக் குடித்துவிட்டே
குடிமகனும் கொடுப்பான் தொல்லை!
கள்ளுண்ட மயக்கம்
வண்டுக்கில்லை!
கள்வெறி கொண்டவன்
கேட்பதற்கில்லை!
விரிவான வெள்ளை அறிக்கை
தேவையில்லை!
அரசாங்கம் கரும்புச்சக்கையாய்
எங்களைப் பிளிவதொன்றும்
தெரியாமல் இல்லை!
புள்ளடிசும் போதையில்லை
புல்லட் பீர் அடிச்சும் கிக்கு இல்லை!
இங்கு விற்பதெல்லாம் போலிதானே!
அலைகள் ஓய்வை விரும்பினாலும்
கடல்கள் விடுவதில்லை!
ஓடி ஓடி உழைத்த மனிதன்
ஓயும் வரை டாஸ்மாக் அவனை
விடுவதில்லை!
விடுவதில்லை!
கேட்கலாம் நீ என்ன யோக்கியமா?
அட முட்டாளே (பெரியோர் மன்னிக்கவும்)
நானும் கூடத் தமிழனட!