கல்வி உதவிகள் .. ?!!
வீட்டுப்பாடம் செய்ய மறந்துபோச்சே...?!
முத்துச்சாமி ஆசிரியர் காதை திருகுவாரே... ?!
கவலைப்பட்டான் கந்தன்..
இலவசமாய்
பேனா,புத்தகம்,செருப்பு ,சீருடை
தாண்டி.....
இதற்கும் ஏதாவது உதவாதா ... அரசாங்கம்...?
மானசீகமாய் வேண்டிக்கொண்டான்..
பூஜையறையில்
”யாமிருக்க பயமேன் “
முருகக்கடவுள்
இன்று காலையிலிருந்தே
இருளில் ஆழ்ந்திருந்தார்
”மின்வெட்டு போலும்”
நினைத்தவனுக்கு
பொறிதட்டியது...
அட..
”கரண்ட் கட்”டிருக்க பயமேன்.... ??!!