நல்லதோர் நாடு செய்வோம்

வீட்டுக்கொருவர் வாருங்கள்
நாட்டுக்கு நல்லது செய்ய
ஆண் பெண் பேதமின்றி
அனைவரும் வாருங்கள்
சாதி மத வேறின்றி
சந்தோசமாக வாருங்கள்

நல்ல எண்ணமுடன் வாரும்
நல்லதோர் நாடு செய்வோம்

இல்லம்தோரும் இருக்கும்
தொல்லை காட்சி விடுத்து
நாட்டு நடப்பு தெரியும்
நல்ல காட்சி வைப்போம்

வரியேய்க்கும் கடைகளில்
வாங்குவதை தவிர்ப்போம்
வீடுதேடி விற்பனைசெய்யும்
வரியோரிடம் வாங்குவோம்

பள்ளி செல்லும் வயதோரை
வேலை செய்திட வைத்தே
வேதனைதான் செய்யாதீர்
பாதகம்தான் பண்ணாதீர்

பருவ வயது வந்தாலும்
பிள்ளப்பெறும் வயது வரை
தொல்லைதான் தொடுக்காதீர்
திருமணம்தான் செய்யாதீர்

நல்ல எண்ணமுடன் வாரும்
நல்லதோர் நாடு செய்வோம்
.............................(தொடரும்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (15-Jun-12, 9:44 pm)
பார்வை : 192

மேலே