ஒப்பில்லா உழவு .7 (கவிதை திருவிழா)
உயிரின் வாழ்வு
உணவினால் அமைந்திருக்கின்றது !
ஆதலால்
\\\"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுதோர்\\\"
என்று மணிமேகலை கூறுகிறது !
நமக்கு உப்பிட்டவரை
உயிர் உள்ளவரை
நினைக்கவேண்டும் - அதனால்
கம்பநாட்டாழ்வார்
உண்டி கொடுத்த சடையப்பவள்ளலை
ராமாயணத்தில் பாராட்டுவார் !
தமிழரின் பண்பு நன்றி மறவாமை !
தன உயிரை கொடுத்து
உழுது உப்பிட்ட உழவர்களை
உள்ள நாள் வரைக்கும்
நினைக்கவேண்டும் .!
உடுத்த உடை இல்லை என்றால்
எங்கோ மறைந்து வாழ்ந்துவிடலாம் !
உறவாட உறவினர்கள் இல்லை என்றாலும்
எப்படியாவது வாழ்ந்து விடலாம் !
உண்ண உணவு இல்லை என்றால்
என்றாவது எங்காவது மடிந்துதான் போவோம் !
வாருங்கள்
உழவர்களையும்
உழவையும் போற்றுவோம்
போற்றினால் போதுமா ?
போதிப்போம் வாருங்கள் !
விவசாயிகளே ,
விவாசாய நிலத்தை
விற்க முன்வறாதிர்கள்....
உங்களை
இந்த எழுத்து வலை மூலமும்,
எழுத்து நண்பர்கள் சார்பாகவும்
கேட்டுக்கொள்கிறோம் !
என்றும் அன்புடன் \\\"நட்புக்காக\\\"
மீண்டும் ஒருமுறை (ஒப்பிலா உழவுக்காக )