என்ன அதிசயிமோ?
என் இதயம் இச்சமூகத்தின்மீது
சீற்றம் கொண்ட போதெல்லாம்
சங்கீத மேகமாய்வந்து
சாரல் மழையாய்
சஞ்சாரம் செய்து
குளிர் மழையாய்
என்னாதம உணர்வினில்
கூத்தாட்டம் ஆடிய
அந்த பாவையின்
இரத்தநாளங்கள் உறங்கி போயின
ஆம்! காதலின் வாசம்தெரியா
சாதி வெறி பிடித்த
இதயம் செத்த பெற்றோரின்
பாசத்தை கிழித்தெரியா அவளிதயம்
என் மீதான அன்பிற்கு
சமாதிகட்டி விட்டது ஏனோ?
ஆம் காதளுக்கும் சமாதி கட்டும்
இழி நிலை மானிட சமூகத்தில்
மட்டுமே மறுமலர்ச்சி பெற்றிருப்பதில்
என்ன அதிசியமோ?