மனிதரில் இத்தனை நிறங்களா

பிறருக்காக உதவுவதற்கு நேரத்தை
செலவு செய்பவர்கள்
தென்னங் கன்றுக்கு நீருற்றுவதுபோல !

எப்பொழுதும் உடனிருக்கும் நண்பர்கள்
பிறருக்காக உதவுவதை விட்டுப்
பிரிவதைக்கூட பொறுத்துக் கொள்ளுதல்
தாயன்பின் ஸ்பரிசம் போல !

தாங்கள் வருந்தி ஈட்டிய பெருஞ்செல்வத்தை
பிறருக்கு கொடுக்க விரும்புபவர்கள்
கர்ணக் கொடை வள்ளல் போல !

தங்களுக்காக இருந்தவற்றை பிறர்
நலனுக்காகத் தியாகம் செய்பவர்கள்
சுதந்திர வீரர்கள் போல !

பொது நலனுக்காகத் தனிப்பட்ட ஒருவர்
வருந்துவதை ஏற்றுக் கொள்பவர்
தன்னையும் உருக்கிக் கொள்ளும்
மெழுகுவர்த்தி போல !

தங்களால் இயன்ற செயலை
பிறரை வேண்டுதல் விருப்பம்
கொண்டவர்களாக இருத்தல்
பட்டாம் பூச்சி பறப்பது போல !

பிறர் குற்றங்கள் அறிந்து
அவற்றை நீக்கி அவர்களுக்கு
உதவுதல் விருப்பம் உடையவர்கள்
தன் ஒளியை தூக்கணாங் குருவிக் கூட்டுக்கு
கொடுத்து மகிழ்வதைப் போல !

என இத்தனை குணம் கொண்ட மனிதர்
யார் உளரோ? அவரே சான்றோர்கள்!
சங்கத் தமிழ் இலக்கியங்களில் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (20-Jun-12, 4:01 pm)
பார்வை : 313

மேலே