நீ என்றுதான் மாறுவாயோ

அழகான பெண்ணுக்கு
உவமையாக
மயில் தான்
கவிஞர்களுக்கு
இன்றும்!

ஆனால்..
அழகான மயில்களை
விஷம் வைத்துக்
கொல்கிறார்களே!

மானிடனே!
நீ என்ன மிருகமா !
இல்லை அசுரனா!

ஒரு உயிரைக்
கொல்வது பாவம்
என்று உன்னுடைய
நீ படிக்கும்
வேதம் உனக்கு
உணர்த்தவில்லையா?

உனக்கு கண்கள்
இருந்தும் குருடனா!
ஆராதிக்க வேண்டிய
அழகை
அழிக்கிறாயே!

உனக்கு இரக்கமில்லையா !
வாயில்லா ஜீவன் உன்னை
என்ன செய்தது ?
உன் சோற்றில்
விஷம் வைத்தா
விட்டது ..?.
நீ என்று திருந்துவாய்!

எழுதியவர் : செயா ரெத்தினம் (25-Jun-12, 12:35 pm)
பார்வை : 322

மேலே