அங்கேயே இருக்கட்டும்

உழைப்பின் மீது நம்பிக்கை
என்றென்றும் வேண்டும் என்றால்
ஆமையின் முயற்சி போல
அங்கேயே இருக்கட்டும் -உழைப்பு

பிறருக்கு உதவுவதால் நம் செல்வம்
அழியும் என்றால்
கைமேல் பலன் என்றாவது கிட்டும்
அங்கேயே இருக்கட்டும் -செல்வம்

செல்வம் பெருகப் பெருக விருந்தோம்பல்
பண்பும் பெருக வேண்டும் என்றால்
ஆயிரங் காலத்துப் பயிராக
அங்கேயே இருக்கட்டும் -பண்பு

நமக்குப் புகழ் கிட்டுவதர்க்காகப்
பிறருக்கு உதவ வேண்டுமென்றால்
திணையைக் கண்டு கோழிக் குஞ்சுகள்
நாடி வருவதைப் போல
அங்கேயே இருக்கட்டும் -புகழ்.

விருந்தினரை நெடுநாள்
உபசரிக்க முடியாதென்றால்
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமே
அதுவும் அங்கேயே இருக்கட்டும் - விருந்து.

எத்துனை துன்பத்திலும்
பிறருக்கு உதவ வேண்டுமென்றால்
ஆடிப் பட்டம் தேடிய விதை போல
அங்கேயே இருக்கட்டும் -துன்பம்

பிறர் நல்வாழ்வில் நாம் மகிழ்வு
கொள்ள வேண்டுமென்றால்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
அங்கேயே இருக்கட்டும் -மகிழ்ச்சி

பிறருக்கு உதவுவதில் நாம்
இன்பம் காண முடியும் என்றால்
அத்திபூ பூத்தார் போல
அங்கேயே இருக்கட்டும் -இன்பம்

செல்வத்தைத் திரட்டுவதில் உறுதியாக
இருக்க வேண்டுமென்றால்
அதிர்ஷ்டம் இருந்தால் அரசு ஆளலாம் என்றால்
அங்கேயே இருக்கட்டும் -உறுதி

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
என்பது சரியென்றால்
ஏழை சொல் அம்பலம் ஏறுவது போல
அங்கேயே இருக்கட்டும் - சிரிப்பு

கேட்பவர்களுக்கு உதவ வேண்டுமென்றால்
கர்ணனின் கொடை குணம் போல
அங்கேயே இருக்கட்டும் -உதவி

தேவைப்படுபவர்களுக்கு உதவ
வேண்டுமென்றால்
தையில் வளராத புல்லும் இல்லை
மாசியில் துளிர்க்காத மரமுமில்லை
அங்கேயே இருக்கட்டும் - தேவை

எழுதியவர் : செயா ரெத்தினம் (29-Jun-12, 8:11 am)
Tanglish : angeye irukkattum
பார்வை : 292

மேலே