!!! நடுவர்களுக்கு நன்றி மடல் (கவிதை திருவிழா) !!!

கவிதை திருவிழாவை சிறப்பித்த எழுத்து.காம் தோழர்கள் அனைவருக்கும் நான் பலமுறை நன்றிகூறி இருந்தாலும், இந்த கவிதை திருவிழாவை சிறப்பித்ததற்காய் மீண்டும் எனது நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்....

முதன்மை நடுவர்கள் - 5
முதன்மை மற்றும் சிறப்பு நடுவர் - 1
சிறப்பு நடுவர்கள் - 2
கவிதை தொகுப்பாளர்கள் - 2

முதன்மை நடுவர்கள்:.
=====================
1. இந்த கவிதை திருவிழாவை பற்றி கூறி இதில் நடுவராக செயலாற்றும்படி நான் கேட்டதும், ரொம்ப நல்ல விடயமட்டுமல்ல நல்ல முயற்சி, உங்கள் முயச்சிக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறி இதில் நடுவராக பணிபுரிய சம்மதித்து கவிதையின் தலைப்பையும் உடனே தந்து, முதல் முயற்சியிலேயே நான் உற்சாகத்தின் உச்சிக்கு செல்ல காரணமாகி முதன்மை நடுவராக பணியாற்றிய மருத்துவர் அய்யா உயர்திரு கன்னியப்பன் அவர்களுக்கும்....

2. இந்த கவிதை திருவிழாவை பற்றி கூறி இதில் நடுவராக செயலாற்றும்படி நான் கேட்டதும், உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துகள் என்று கூறி, நான் இதுவரை நடுவராக பணிபுரிந்த அனுபவமில்லை இருந்தாலும் உங்கள் அன்பு வேண்டுகோளை ஏற்று நான் நடுவராக பணியாற்றுகிறேன் என்றுகூறி உடனே கவிதையின் தலைப்பையும் தந்து, முதன்மை நடுவராக மிக திறம்பட செயலாற்றிய அய்யா உயர்திரு காளியப்பன் எசக்கியேல் அவர்களுக்கும்....

3. இந்த கவிதை திருவிழாவை பற்றி கூறி இதில் நடுவராக செயலாற்றும்படி நான் கேட்டதும், அருமையான முயற்சி, விவசாயத்தை பற்றியும், சேகுவேராவை பற்றியும் நிறைய தோழமைகளுக்கு அதிகம் தெரிந்திருக்காது, இந்த கவிதை திருவிழா போட்டியின்மூலம் அதை பற்றி அறிந்துகொள்ளவாவது பலர் முயலுவார்கள் என்று கூறி என்னை பாராட்டி உற்சாகபடுத்தி கவிதையின் தலைப்பை கொடுத்து முதன்மை நடுவராக பணியாற்றியதோடு அடிக்கடி பல ஆலோசனைகளையும் வழங்கி உந்து சக்தியாக உர்ச்சாகபடுத்திய அண்ணன் உயர்திரு பொள்ளாச்சி அபி அவர்களுக்கும்...

4. இந்த கவிதை திருவிழாவை பற்றி கூறி இதில் நடுவராக செயலாற்றும்படி நான் கேட்டதும், அருமையான முயற்சி தம்பி, செம்மையாக செழிக்கட்டும் உமது முயற்சி என்று கூறி, பணிச்சுமையின் மத்தியில் நீங்கள் என்னை நடுவராக பணியாற்ற வேண்டுவது குருவியின் தலையில் பனங்காயை வைப்பதை போல் இருக்கிறது என்று தனது பணிச்சுமையை சுட்டிகாட்டியவர், உனது அன்பு கோரிக்கையை என்னால் மறுக்க முடியவில்லை என்று கூறி கவிதையின் தலைப்பையும் கொடுத்து முதன்மை நடுவராக பணியாற்றி, சிறப்பாக பல விடயங்களை பகிர்ந்துகொண்டு பல ஆலோசனையையும் வழங்கிய அன்பு அண்ணன் உயர்திரு மு. ராமச்சந்திரன் அவர்களுக்கும்...

5. இந்த கவிதை திருவிழாவை பற்றி கூறி இதில் நடுவராக செயலாற்றும்படி நான் கேட்டதும், அருமையான முயற்சி என்று என்னை பாராட்டி, பல விடயங்களை பகிர்ந்து கவிதையின் தலைப்பையும் தந்து, என்னை உற்சாகபடுத்தி தனது பணிச்சுமைகளுக்கு இடையிலும்கூட முதன்மை நடுவர்காக சிறப்பாக செயல்பட்ட அய்யா உயர்திரு சங்கரன் அய்யா அவர்களுக்கும்...

முதன்மை மற்றும் சிறப்பு நடுவர்
===============================
1. இந்த கவிதை திருவிழாவை பற்றி கூறி இதில் நடுவராக செயலாற்றும்படி நான் கேட்டதும்,
எனது வேண்டுகோளை ஏற்று ''முதன்மை நடுவராகவும் சிறப்பு நடுவராகவும்'' சிறப்பாக பணியாற்றி, சிறந்த கவிதைகளின் இறுதிகட்ட தேர்வில் தனது முழு பங்களிப்பை பிரயோகித்து சிறப்பாக செயலாற்றி இந்த கவிதை திருவிழாவை சிறப்பித்த தமிழ் ஆசிரியர் அய்யா உயர்திரு பொற்செழியன் அவர்களுக்கும்....

சிறப்பு நடுவர்கள்;.
================
1. இந்த கவிதை திருவிழாவை பற்றி கூறி இதில் நடுவராக செயலாற்றும்படி நான் கேட்டதும்,
தங்களது பணிச்சுமைகளுக்கு இடையிலும் எனது அன்பான வேண்டுகோளை ஏற்று, இறுதி கட்ட தேர்வுகளில் சிறப்பு நடுவராக சிறப்பாக செயல்பட்டு, பல கருத்துரைகளையும் வழங்கி, என்னுடன் இணைந்து செயல்பட்டு இந்த கவிதை திருவிழாவை செம்மைபடுத்திய உயர்திரு அண்ணன் ''முத்து நாடான்'' அவர்களுக்கும்....

2. இந்த கவிதை திருவிழாவை பற்றி கூறி இதில் நடுவராக செயலாற்றும்படி நான் கேட்டதும், உடனே எந்த ஒரு மறுப்பும் இல்லாமல், எனது அன்பு வேண்டுகோளை ஏற்று சிறப்பு நடுவராக செயல்பட ஒப்புகொண்டதோடு, நல்ல முயற்சி தம்பி உங்களின் இந்த முயற்சி வெற்றியடை வாழ்த்துகிறேன் என்று என்னை வாழ்த்தியதோடு, இந்த கவிதை திருவிழா சிறக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்கிறீர்களோ அதன்படி செயல்பட்டு உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்து, இறுதிகட்ட தேர்வில் சிறப்பு நடுவராக சிறப்பாக செயலாற்றி சிறந்த கவிதைகளை தேர்வு செய்து அளித்த அன்பு அக்கா திருமதி ''நா. வளர்மதி'' அவர்களுக்கும்

கவிதை தொகுப்பாளர்கள்;.
========================
மேலும் எனது வேண்டுகோளை ஏற்று பதிவான மொத்த கவிதைகளையும், தனி தனியாக அந்தந்த தலைப்பின்கீழ் அருமையாக தொகுத்து வழங்கியதோடு, இந்த கவிதை திருவிழா பற்றி எழுத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடன் சேர்ந்து விடுகையின்மூலம் தெரியபடுத்தி, இந்த கவிதை திருவிழாவை நமது கவிதை திருவிழாவாக எடுத்துகொண்டு, எனக்கு பேருதவி புரிந்து இந்த கவிதை திருவிழாவை சிறப்பித்த அன்பு தம்பி திரு ஈஸ்வர் தனிகாட்டுராஜா அவர்களுக்கும்....

எனது வேண்டுகோளை ஏற்று பதிவான மொத்த கவிதைகளையும், தனி தனியாக அந்தந்த தலைப்பின்கீழ் தொகுப்புகளாக அருமையாக தொகுத்து வழங்கி, இந்த கவிதை திருவிழா சிறக்க எனக்கு பேருதவி புரிந்த தோழி பிரியாராம் அவர்களுக்கும்....

இந்த கவிதை திருவிழாவில் நடுவராக பணிபுரிய நான் கேட்டபொழுது மன்னித்துவிடுங்கள் தம்பி தற்சமயம் பணிச்சுமை அதிகமாக உள்ள காரணத்தால் என்னால் தாங்கலோடு இணைந்து செயல்பட முடியவில்லை, ஆனாலும் இந்த கவிதை திருவிழா சிறப்பாக சிறப்புபெற்ற நானும் சிறு பங்களிப்பை அளிக்கிறேன் என்று கூறி, இரண்டு கவிதைகளுக்கு தலா ஆயிரம் சிறப்பு பரிசை அளித்த அய்யா உயர்திரு பரிதி முத்தரசன் அவர்களுக்கும்...

மற்றும் இந்த கவிதை திருவிழா செம்மையாக பலவழிகளில் மறைமுகமாகவும், வெளிப்படியாகவும் எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த தோழமைகள் அனைவருக்கும்....

இந்த கவிதை திருவிழா சிறப்பாக நடக்க தங்கள் முழு ஆதரவையும் அளித்த எழுத்து.காம் குழுமத்திற்கும்....

தோழமைகள் அனைவருக்கும்....

சிரம்தாழ்த்தி கரம்கூப்பி
எனது பணிவான
நன்றியினை உரித்தாக்குகிறேன்....

முதன்மை நடுவர்கள் 5 பேரும் இல்லை என்றால் இந்த கவிதை திருவிழா உயிர் பெற்று இருக்காது, அவர்களின் சிறப்பான செயல்பாடுகளால்தான் இந்த கவிதை திருவிழாவே சிறந்து விளங்கியது, நான் ஒரு சிறுவன் என்றுகூட நினையாது எனது கோரிக்கையை ஏற்று ஒருமாத காலம் என்னுடன் இணைந்து செயலாற்றி, இந்த கவிதை திருவிழாவின் தூண்களாக செயல்பட்ட முதன்மை நடுவர்கள் ஐவருக்கும் மீண்டுமொருமுறை நன்றிகளோடு சிரம்தாழ்த்தி தலைவணங்குகிறேன்....

நன்றிகளுடன்
நிலாசூரியன்....

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (4-Jul-12, 1:14 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 895

மேலே