வந்துவிடுகிறேன் உன்னிடத்தில்
உண்ண மனமில்லை
என் உணர்வுகளில் நீ
வாழ்ந்துகொண்டிருப்பதால்
உறங்க மனமில்லை
உன் முகம் என் விழிகளுக்குள்
உறங்காமல் விழித்திருப்பதால்
மனம் மாறவும் மனமில்லை
மயங்க வைக்கும் உனது நினைவுகளை
மட்டுமே நேசிப்பதால்
வாழவும் மனமில்லை
இவ்வுலகில் வசிக்கவும் விருப்பமில்லை
வந்து விடுகிறேன் உன்னிடத்தில்
ஏந்திகொள் உன் பொற்கரத்தில்
PRIYA