[279 ] படைப்பை நிறுத்திடுவோம்..!

அயல்நாட்டார் தம்முள்ளே
அவலங்கள் வளர்த்திடுவார்!
அண்டை நிலத்தவரோ
சண்டைக்கு நின்றிடுவார்!
கண்ட நதிகளையே
கைதுசெய்ய முயன்றிடுவார்!
காய்ந்த நதி பார்த்தால்
கட்சிவைத்து மணலெடுப்பார்!
சாலைகள் வருமென்று
சாய்த்து மரமறுப்பார்!
வேய்ந்த குடிசைகளை
வெந்தழலில் சிலரழிப்பார்!
மாய்ந்தோர் பெயரிலுமே
மாற்றி வாக்களிப்பார்!

கூடிக் களித்துவிட்டுக்
குழந்தையையும் கொடுத்துவிட்டு
ஓடிச் சிலர்மறைவார்!
உடைபோல் பெண்களைவார்!
பிறக்கும் குழந்தைகளோ
கிருமிகளைப் போல்வளரும்!
நெகிழாத நெஞ்சத்தார்
நெகிழிகளால் பலகழிவால்
உண்ண உணவளித்து
உயிரளிக்கும் நிலைமைகளை
மண்ணை மலடாக்கி,
மரத்தைக் கரியாக்கி,
விண்ணைப் புகையாக்கி
வான்வேளியைத் துளையாக்கி,
பாலை நிலங்கூடப்
பார்ப்பதற்கு அரிதாக்கி
என்ன கிடைக்குமென
இவ்வகையில் ஓடிடுவார்!
மிச்சமென எங்கும்
மாசுகளை நிரப்பிவிட்டு
மூச்சடைக்க இவரோடி
முன்னேற்றம் எதில்காண்பார்?
அகிலத்தைக் காப்பாற்ற
அவலமிவை தாம் மாற
ஆக்கத்தை உள்நினைத்து
ஆண்டவனாய் நாமிருப்போம்!
படைப்பை நிறுத்திடுவோம்!
பகற்கனவை அழித்திடுவோம்!
-௦-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (6-Jul-12, 7:09 am)
பார்வை : 295

மேலே