நீரலையே ! நீரலையே! நீ எங்கே போகுதியோ ?

நீரலையே ! நீரலையே !
நீயெங்கே போகுதியோ ?
நீயெங்கே போகுதியோ ?
கார் மழையே ! கார் மழையே !
கண்ணீராய் வழியுதையோ ?
கண்ணீராய் வழியுதையோ ?

வில்லாக உடல் வளைத்து
வியர்வையால் நிலம் நனைத்து
கல்லாய், கட்டாந்தரையாய்
கண்டிருந்த கழி நிலத்தை
வெல்லம் மண்டுகிற கருப்பஞ்
சோலையை உருவாக்க
உழைப்போடு கடனுக்கு
பணமும் வங்கி வந்து
பகல் இரவு நேரங்களைப்
பார்க்காது உழைத்தானே
அந்த சின்னசாமி
குடும்பத்தோடு உழைத்தானே
அந்தச் செல்ல சாமீ
உர மருந்தை குடிச்சிபுட்டு
உசிரை விட்ட எளவு கேட்க
நீரலையே ! நீரலையே !
நீயங்கு போகுதியோ
நீயங்கு போகுதியோ ?
கார் மழையே! கார் மழையே !
கண்ணீராய் வழியுதையோ
கண்ணீராய் வழியுதையோ ?

(சின்ன பிளாஷ் பேக் )

"கரும்பு போட்டு, சீனியாக்க
கரும்பைப் போடு உன் நிலத்திலே!"
என்று சொன்னார் பீல்ட் ஆபீசர்!

"கரும்பு தின்னக் கூலி வேண்டாம்;
ஆனா, கரும்பு வேணுமினா காசு வேணும் ;
அதனாலே இந்தா! இந்த முன் பணம்!
கடனைப் போல வைச்சுக்க! வெட்டி முடிச்ச
பின்னாலே கணக்குப் பார்த்து
கழிச்சுக்கலாம் !" என்று சொன்ன
அந்த மனுஷ சாமி ஆபீசர்
கையைக் கண்ணோடு ஒத்திக் கொண்டு
சந்தோஷமாய் வீடு வந்தான்
சத்தம் போட்டு பேசாத சின்னசாமி!

வெள்ளாமை நல்லாத்தான்
வெளைஞ்சு கெடந்துச்சே!
காலைப் பொழுது விடிஞ்சா
கணக்குப் பார்த்த லாபந்தான்
கையில் கிடைக்குமென்று
கனவோட படுத்தானே அந்த
கரும்பு விவசாயம் பார்த்தவனே !

அரவைக்கு மில் ரெடி
அறுப்புக்கு கரும்பு ரெடி
ஆனா அவனுக்கு பெரிய இடி!
உள்ளூரிலே அறுப்புக்கு ஆள் இல்லே
அசுலூரிலே ஆளே இல்லை !
எல்லாம் இலவச அரிசியாலும்
நூறு நாள் வேலையென்று
ஏதோ சும்மா வேலை செஞ்சா
நூத்துக்கு தொண்ணூறு பழுதிலாம
கிடைக்குற காலத்திலே
"கூலிக்கு வாங்க!ன்னு
மாரிலே அடிச்சு அடிச்சு அழுதாலும்
கூலிக்கு 'மாரடிக்க' ஆளே இல்லை !
அரவை மில்லுக் காரரு
ஆர்டரைக் கேன்சல் பண்ணிப் போட்டாரு ;
கொடுத்த காசை வட்டியோடே கேட்டாரு
இல்லாட்டி வீட்டை சப்தி செய்வோம் என்று
ஒரு போடு போட்டாரு!

இடி விழுந்த மரத்தைப் போல அங்கேய
சாஞ்சவந்தான் அந்தச் சின்ன சாமி
அடுத்து எழுந்தது அந்த உர மருந்தைக்
குடிக்க எழுந்த வேளையில்தான்;
அந்த வேந்தனைத்தான் -
அரைச்ச வேதனையைத்தான்
கண்டு கண் கலங்கி நிக்குற
ஊரோட சேர்ந்து அழுவதற்கு
நீரலையே! நீரலையே !
நீயங்கு போகுதியோ ?
கார் மழையே! கார் மழையே !
கண்ணீராய் வழியுதையோ?

(இது அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் )

எழுதியவர் : முத்து நாடன் (12-Jul-12, 12:03 am)
பார்வை : 168

மேலே