அவளை போன்றே சிலையும்

அவளை போன்றே செதுக்கிய சிலையிலாவது
அன்பு வெளிப்படும் என்ற அற்ப ஆசையில்
கூந்தலை தொடங்கும்போது
திட்டு திட்டாய் திக்கற்றுத் திரிந்த
மேகங்களை ஒருசேர அமைத்து
இடுப்பின் கீழ் வரை வரைந்தேன்...

கண்களை தொடங்கும்போதே
அற்புதத்திர்க்கும் அப்பாலுள்ள ஒளி
என்னை தற்காலிக சிலையாக்கி என் கரங்களை பாதம் வரை கொண்டு சென்று
முற்றுப் புள்ளி வைத்தது...

இறுதியாக நீ தற்காலிக
சிலையான போதே
என் அன்பு வெளிப்பட்டு விட்டதடா
மானிட மடயனே
என்றது அந்த சிலை......

பிறகுதான்
நீ செதுக்கியது
பெண் சிலையடா
மடயனே என்று
நான் உணர்ந்தேன்..........

எழுதியவர் : அன்பழகன் (12-Jul-12, 12:08 am)
பார்வை : 165

மேலே