கடவுளின் கிறுக்கல்கள்!

(சாலைகளில் பிச்சை எடுக்கும் மழலை உள்ளங்களுக்காக இக்கவிதை)

கடவுளின் கிறுக்கல்கள்
விடை தெரியாக் கேள்விகளாய்
தொக்கி நிற்கும் எச்சங்கள்!
களைகளின் பிழையில் விளைந்த
விலை இல்லாப் பூக்கள்!

சாலையின் வளைவுகளில்,
பேருந்து நிருந்தங்களில்,
நாற்சந்திகளில்
காணக்கிடைக்கலாம்!

கண்ணுறக் காட்சிப்படுத்திக்
காசோ பணமோ
கேட்கலாம்!

விதைகள் வெயிலில் வாடுகையில்
மரங்கள் ஓய்வில்
உலறலாம்!

உதவிடும் எண்ணம் இருந்தாலும்
ஊருக்குப் பயந்து நீ ஒதுங்கலாம்!
வறுமை அவர்களுக்கு
விதிக்கப்பட்டதல்ல!
அவர்களை மீட்கவும்
விதிகள் இல்லை!

உன் வாழ்க்கைப் பாதையில்
உருப்படியாய்
ஒரு தளிரையேனும் மரமாக்கிவிட்டுப்
போ!
முடிந்தால் ஒரு மலரையேனும்
பள்ளியில் கல்விகொடுத்து
மலரச்செய்து
நீ மடி!

எழுதியவர் : சரவணா (14-Jul-12, 12:02 am)
பார்வை : 583

மேலே