வஞ்சிர மீன் வாஸ்து மீன்
அத்தனை தகுதிகள் ஒத்திருந்தும்
வண்ணமின்மையால்
வஞ்சிர மீன்கள்
சமையலறை சட்டியில்
வண்ணத்தால்
வாஸ்து மீன்கள்
வரவேற்பறை தொட்டியில்
மச்சம் அதற்கும்
மச்சம் வேண்டும்
நிறமற்றது வெட்டப்படுகிறது
நிறமுள்ளது ஊட்டப்படுகிறது
நிறத்தால் எத்தனை நிலை மாற்றம்