அணுகுண்டு இல்லா அறப்போர்

அணுகுண்டு இல்லா அறப்போர்

அந்த யுகம்
ஜாஹிலிய்யப் பொழுதுகள்
விழும் கிரணங்கள் எங்கும்
ஏற்படும் மரணங்கள் என்றாயிற்று

கத்தியால் குத்துண்டு சக்தியிழந்து
சகாபாக்கள் துடி துடிக்கையிலே
சத்தியம் ஓங்குக சத்தியம் ஓங்குக என்று
கத்திக் கத்தியே கைகளைக் கோர்த்தார்கள்
உயிர்களை நீத்தார்கள்

அண்ணலார்
சத்தியம் வெல்ல
சாந்தி மார்க்கம் ஜெயம் பெற
உண்மையினை உரைத்தார்கள்
தன் மென்மையினை விரித்தார்கள்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்டு
காரிருளை நீத்த நபி

பொல்லினால் பட்ட அடி
வடு ஆகா முன்னமே
நபி பட்டார்கள் கல்லடியும்

கல்லடித்த காயம் நினையா
பொன்னபி பொங்கி எழவில்லை
பொறுத்துக் கொண்டார்கள்
பொறுமையினை நிறுத்திக் கொண்டார்கள்
அருமை நபி.

பொல்லாங்கு இல்லா கோமான்
எம் பெருமான்
சாந்த குணத்தின் உறைவிடமாம்
காந்த உள்ளம் கொண்டவராய்
உம்மத்திடம் சென்று தன்னை
ஈசனின் தூதர் என்றனரே
இறையினை நாடி வந்திடுங்கள்
இஸ்லாம் வாழ கற்றிடுங்கள்
இன்னா செய்ய மறுத்திடுங்கள்
இமயம் வரைச் சென்றிடுவீர்
என்ற எங்கள் கோமான் நபி


சொல்லிய நா உள்ளெடுக்க
சொன்ன சொல்லை மறுத்த கூட்டம்
கண் தெரியா மாடுகளாய்
விழுந்தனர் நபி மீது
இழுத்தனர் சாட்டைகளால்
அடித்தனர் கோட்டை அதிர
கிழிந்த போன சட்டையுடன்
காட்சியளித்தார் அழகு நபி
கோமாளி ஒப்ப கோலத்திலே.

காபிர்களால் பட்ட அடி
தாங்க முடியா தவித்துக் கொண்டே
தண்ணீர் கூட கொஞ்சமின்றி
தாகத்தில் துடித்துக் கொண்டார்
கண்ணீர் விட்டே கன்னல் நபி
காபிர் அடி வாங்கிக் கொண்டு
சாந்தத நபி தாங்கிக் கொண்டார்

தலைமுடியை கோதி விட
கையில் பலம் அற்றவராய்
எம்பெருமான் புன்னகைத்தார்
இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.

நபியினது தோழர்கள் உண்மையினை
உணர்ந்திடவே
சத்தியத்தை நிலைத்திட
போதனைகள் செய்தனரே
போற்றும் வகை நடந்தனரே
உன்னதமாய் உணர்த்தினரே

பொங்கியெழுந்த காபிர்கள்
பொசிக்கிட நினைத்தனரே
வீண் வம்பு வளர்த்தங்கு
போர் செய்ய வந்தனரே


பொல்லாதார் என நினைத்து
வல்லோனை மறுத்திடுங்கள்
வான் மறையை விட்டுடுங்கள்
தூதர் என மறுத்திடுங்கள்
தூய மதம் நாம் சொல்வோம்
எம்மை நீர் வழி தொடர்வீர்

என்றுரைத்த காபிர்கள்
இல்லையென்ற முஃமின்களை
காலிரண்டில் கயிறு கட்டி
இரு தொங்கலை மா இழுக்க
ஈரல் கூட அறுந்து தெரிக்க
இழுபட்ட முஃமின்கள்
அறுபட்டுக் கிடந்தனரே
நெஞ்செல்லாம் பிளந்திடவே

நபி உயிரோடு கலந்த
உத்தம தோழர்கள்
உன்னத வழியினிலே
ஸஹீதானார்கள் இறையிடத்தில்
மறையாத வரலாற்றில்
நிலையான இடம் பிடித்து
நின்றார்கள் எம்மனதில்
நீங்காமல் என்றென்றும்
ஆழமான அன்புள்ள அல்லாஹ் முன்
வென்று கொண்டார்கள் முதலிடத்தை
சென்றடைந்தனரே எம் பெருமானை

நின்று கொண்டார்கள் பாதாளத்தில்;
நபி சொல் கேளா காபிர்கள்.
உண்மையினைக் கண்டு கொள்ளும்
காலம் வரும் வரை.

பொறுமையின் தாயகம்
அருமை எங்கள் நபி நாயகம்
பொறுத்துக் கொண்ட எல்லாமே
அறுத்துக் கொள்ள வழி வந்ததுவே
காபிர்களை வெறுத்துக் கொண்ட முஸ்லிம்கள்
பொறுமைக்கும் அளவுண்டு
மடையுடைத்தால் நீர் மேவும்
தாங்கள் தாடை அசையா
வழியென்னமோ?
உணர்த்தினர் உம்மி நபிக்கு
உணர்விழந்த கண்மணிகள்.
உயிரான தோழர்களும்
நிலை குழைந்து நின்று கொண்டு

நிச்சயமாய் ஒரு பொழுது
தோன்றிடுமே எமக்கு
அப்பொழுது
நாம் நிற்போம் முன்னிலையில்
அதுவரையில் அன்பர்களே
உறுதியாக நின்றுடுங்கள்
அறுதியாக சொல்லிடுங்கள்
இறை வேதம் ஒன்றுண்டு
இறைத்தூதர் ஒருவரென்று
இஸ்லாம் தான் மார்க்கம் என்று
முஹம்மது ஓர் இமாம் என்று
முழு உலகும் தெரியட்டும்
நாற்றிசையில் ஒலிக்கட்டும்
நாடெல்லாம் நாம் சென்று
நிலை நிறுத்தடுவோம்- ஒன்றாய்
நின்றால் மலை ஒன்றைச் சாய்க்கும்
நிலை என்றும் வருமே
என்றுரைத்த நபிகளார்
மறையருள் காக்க
இறையருள் வேண்டி
நிதமும் துதித்தனரே
தூக்கம் இன்றி தவித்தனரே.
இறை வஹியை பார்த்தங்கு
உடலெங்கும் வியரத்திங்கு


அல்லாஹ்வை நம்பாத
பொல்லாத காபிர்கள்
போலிகளை நம்பி நம்பி
உண்மைகளை புறந்தள்ளி
பொய்யினைக் கட்டவிழ்த்து
உண்மைகளைச் சிறையிலிட்டு
முஸ்லிம்களை சிறை வைத்து
உயிரோடு வதை செய்து
உடம்பெல்லாம் நரம்பறுந்து
துடிதுடிக்க அடியடித்து
துளி இரத்தம் இல்லாமல்
குடித்தனர் காபிர்கள்
நெஞ்சு வெடித்தனர் நபித்தோழர்கள்

அறம் இல்லா பொல்லாதார்
புறம் எங்கும் உதிரத்தால்
வரைந்த ஓவியங்கள் ஸூஹதாக்களின்
ஒப்பனைச் சந்தனங்கள்
வெட்டெங்கும் பட்ட உடல்
சிலந்தி வலை போல கண்ட நபி
சிந்தாமல் தூக்கிப் பார்த்து
வந்த அழுகை ஓயாமல்
அழுது கொண்ட எம்பெருமான்
அல்லாஹ்வை நோக்கி
அருந்தவம் செய்யவே
பொல்லானை அழித்திட
வந்ததுவே தூதொன்று

எல்லோரும் சேர்ந்தங்கு போர்க்கொடி
தூக்கிடவே
துஷ்ட யுகம் ஒழித்து விட
ஓங்கி நின்ற வாள் கரங்கள்
சாய்த்ததுவே மண்ணில் சில
கறை படிந்த காபிருடலை
உடன்படிக்கை செய்தும் நபி
யுத்த தருமம் கொண்ட நபி
விழுமியங்கள் சொல்லித்தந்த
வழியிலவர் செய்தார் யுத்தங்களை

ஒப்பந்தம் மீறிவிட்ட காபிருக்கும்
கொடுத்தார் நபி அடைக்கலமாம்
அடைக்கலத்தில் காபிர்களோ
அடைந்தனர் சந்தோசம்
மனமதிலே முஹம்மது செய்த
மாற்றங்கள் அவர்களுக்கோ ஆனது
ஏமாற்றங்கள்.

மனங்களில் ஏற்பட்ட மாறுதல்கள்
காபிர்களுக்கு ஏற்பட்ட ஆறுதல்கள்
உணர்ந்திட்ட காபிர்கள்
உண்மைக் கரம் கொடுத்தனர்
இஸ்லாம் தழைக்க உழைத்தனர்.

எழுதியவர் : imam (15-Jul-12, 8:03 pm)
சேர்த்தது : myimamdeen
பார்வை : 239

மேலே