பழமொழிகள்

என்றும்
பழமையனவையே
பழமொழிகள்!

புதுமொழி பேச
உனக்கு ஏது
மொழி!

ஈடு இணையில்லை
பழமைக்கு!

சுத்தம் சோறு போடும்
எது? -வயிறு
காலியாக உள்ளது
இன்று !
சோறு எங்கே?

அன்று !
மாமியார் உடைத்தால்
மண் குடம்!
எங்கே? போனது?

இன்று !
மருமகள் உடைத்தால்
பொன் குடம் !
எங்கே?காலிகுடம்தானே
முதியோர் இல்லத்தில் ...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (17-Jul-12, 1:30 pm)
பார்வை : 890

மேலே