விடியும் எல்லா பொழுதும்

தோழனே
நினைவுபடுத்திக் கொண்டேயிரு
தரையில் இருந்து வரும் நீரின் ஊற்றில்
மடிந்து போனவர்களின் குருதிகள் ஊறி வருவதை !

நாங்கள் ஓடி விளையாடிய முற்றங்களில்
எங்கள் ரத்தம் குடித்த
அந்த நரிகளின் பற்களுக்கு
பல்லு தீட்டி விடும் மானமில்லா
மனிதர்களுக்கு மரணவாசல் பிரசவிக்கும் !!

குருதி வடுக்களின் சுவடுகள்
மறந்து எம்மை
கடித்து குதறிய கயவரின்
காலடி நக்கி பிழைக்கும்
தாசி மகன்களை சரித்திரம் மன்னிக்காது !


விடியும் எல்லா பொழுதும்
வடியும் எம் கண்ணில் நீர் -இது
முடியும் ஒரு பொழுது -பகை
குடியும் அழியும் அப்பொழுது !!!

தோழா !
நான் பகையை முட்டி வீழ்த்திய
பாதைச் சுவடுகளில்
பதுங்கி கிடக்கிறது என் பாய்ச்சல்
பேரிடியாய் எழுவதற்கு........

இப்போது
நீ
உன் நிகழ்காலத்தின் மறைவு
தெரியாமலே
எதிர் காலத்தையும் இழக்கிறாய்
தேச உணர்வில்லாமல் !

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (17-Jul-12, 3:51 pm)
பார்வை : 224

மேலே