தாய்மொழி

இவ்வுலகத்தின்
முதல்
மொழி!
அன்புள்ள
அம்மா! அப்பா ! ஆசான்! ஆண்டவன்!
என்னும்
"அன்புமொழி "
திரு ஏடு கண்ட
வைகை ஆற்றின்
ஏட்டுமொழி!
மூப்பால்
வகுத்த
வாழ்க்கை மொழி!
ஐம்பெரும்
காப்பியங்கள் படைத்த
சங்கமொழி!
சான்றோர்கள்
தொகுத்த
நீதிமொழி!
புரட்ச்சிகள்
படைத்த
பாரதமொழி!
சுதந்திரம்
தந்த
வெற்றிமொழி!
சமத்துவம்
கண்ட
ஞாணமொழி!
இசையோட இணைந்த
கவிதை - கோர்த்த
காணமொழி!
அரங்கேற்றம் எறிய
நடராஜ-னுக்கு
நாட்டியமொழி!
காலம்மெல்லாம் கடந்து
கல்வெட்டாய் கலந்த
"காதல்மொழி"
பிறந்த
குழந்தையின்
ஓசைமொழி!
இறந்த
மனிதனின்
ஆயுல்மொழி!
மனிதா!
மண்னின் பெருமை
மக்களின்
வலிமை!
மதங்களின் உவமை!
என்றும் தாய்மை
எந்தன் தாய்மொழி!
தமிழ்மொழி!
வாழ்க! வாழ்க! வாழ்க!