எழுத்து தளம் தயவு கூர்ந்த வேண்டுதல்

எழுத்து தளம் இன்று தமிழ் துறைக்கு அதிலும் கவிதை கட்டுரை என அனைத்து துறையிலும் செவ்வென செயல் பட்டு வருகிறது .

நாம் வளர்த்து வரும் இந்த தமிழ் துறைக்கு நம்மால் முடிந்த உதவிகளையும் செய்து இன்னும் மென் மேலும் வளர்க்க வேண்டும் அதற்கு நம் தளமும் ஒத்துழைக்க வேண்டும் .

எனக்கு தெரிந்த ஆலோசனைகள் :

- நமது வாசகர்களை தினமும் நமது தளத்தில் எட்டி பார்த்து தன்னை மறந்து ஒரு மணித்துளிகளாவது இருக்க செய்ய வேண்டும்

- பரிசு வழங்குவது ஒருவருக்கு மட்டும் அல்லாமல் சிறந்த பத்து கவிதைகள் என வழங்கலாம் .

- பரிசுகளை நம் தளத்தில் உள்ள நண்பர்கள் கூட நேரிடியாக வழங்க முன் வரலாம் / அந்த ஏற்பாடுகள் செய்யலாம் .

- ஆசிரியர் குழு நியமிக்கலாம் ( அவர்கள் மட்டும் மதிப்பெண் வழங்கும் படி செய்யலாம் )

- அனைத்து படைப்புகளும் ஒரு சேர மாதம் ஒரு முறை நூல்களாகவோ அல்லது மாதாந்திர புத்தகமாகவோ வெளியிடலாம் .

- வாசகர்கள் எளிதாக பயன்படுத்தும் படியான மென் பொருள்கள் இன்னும் சேர்க்க படலாம் .

- இது அனைத்தும் கடினமாக தெரிந்தாலும் அனைவரும் ஒத்துழைத்தால் கண்டிப்பாக இன்னும் சிறப்பாக அமையும் .

நன்றி.

மேற்கூறிய ஆலோசனைகளில் பிழை இருப்பின் மன்னிக்கவும் .

எழுதியவர் : நெல்லை பாரதி (22-Jul-12, 12:28 am)
பார்வை : 161

மேலே