காலை வாரி விட்ட கதை...........
நெருப்பை தொட அஞ்சவில்லை...
ரோஜாவை தொட அஞ்சுகிறேன்!
காரணம்
நான் அவளுக்கு கொடுத்த முதல் ( பூ )
சாத்தானை பார்த்து அஞ்சவில்லை...
சிவனை பார்த்து அஞ்சுகிறேன்!
காரணம்
நான் அவளுடன் வணங்கிய முதல் (கடவுள்)
இறக்கும் நாளால் அஞ்சவில்லை...
பிறந்த நாளால் அஞ்சுகிறேன்!
காரணம்
நான் அவளிடம் காதலை சொன்ன (நாள்)
முதலில்
" பூக்களும் கை கொடுத்தது
கடவுளும் கை கொடுத்தது
பிறந்தநாளும் கை கொடுத்தது"
மொத்தமாய் காலை வாரி விடுவதற்காக .............