ரமலானே வருக !

மாதங்களில் புனிதமாம்
இந்த மாண்புமிகு ரமலானின்

மேன்மையான நோன்பினை
நேர்மையாக பிடித்து நாம்

திருக்குரானை தினம் ஓதி
தவறாது தராவிக் தொழுது

படைத்த ரப்பிடம் இரு கரம் ஏந்தி
நம் தேவையை நிறைவேற கண்ணீர் சிந்தி

எங்கள் ரப்பே ! எங்களை நேர் வழி நடத்தி
ஈமானை வலுவாக்கி தர

கேட்கின்றோம் துவா உன்னிடம்
எங்கள் நோன்பினை ஏற்று கொள்வாயாக !


ஸ்ரீவை .காதர் .

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (22-Jul-12, 8:06 pm)
பார்வை : 212

மேலே