தந்தையாருக்கு பிறந்தநாள் !!!
பெற்ற தாய்க்கும், கற்றுக்கொண்டிருக்கும் தமிழுக்கும் வணக்கம் - அனுபவமே கடவுள்.
அப்பா நீ பிறந்த பொழுது உன் தாயிடம் மகிழ்ச்சி !
உன் ஜென்ம நட்சத்திரம் ( 1930 ஆடி உத்திரட்டாதி ) எனக்கு தமிழுடன் நெகிழ்ச்சி. !!
நீ வாழ்ந்த/வாழுகின்ற எளிமையான வாழ்க்கை முறையும், உயர்ந்த சிந்தனையும் எனக்கு என்றும் பயிற்சி பட்டறையாக விளங்குகிறது.
நீ பஞ்சாலையில் காக்கி சட்டை உடுத்தி கொண்டு எங்களுக்கு வண்ண ஆடைகள் வாங்கி கொடுத்து அழகு பார்த்தாய்.
நீ தாயுடன் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் தொடர தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
வேண்டும் ஆசீர்வாதம்.