கத்திரிக்காராசாவுக்கு கல்யாணம்...

காய்கறிகள் தோட்டத்துக்குக்
கத்திரிக்கா ராசாவாம் -அந்தக்
கத்திரிக்காராசாவுக்கு கல்யாணம்தான்
பேசாவாம்
பொருத்தமான
பொண்ணதேடி ராசா போனாராம்
பொருத்தமான
பொண்ணதேடி ராசா போனாராம்
அடுத்தத் தெரு மார்கெட்டுல
வந்து நின்னாராம்
ராசா வந்து நின்னாராம்
சொகுசா வந்து நின்னாராம்
பச்ச மிளகா பொண்ண
பார்த்துபுட்டாராம் -அது
பார்க்க
நல்லா அழகுதான்னு நினைச்சுகிட்டாராம்
ராசா நினைச்சுகிட்டாராம்
மனசுல நினைச்சுகிட்டாராம்
கிட்டவந்து தொட்டுப்
பார்த்து ஆஹா என்றாராம்
கிட்டவந்து தொட்டுப்
பார்த்து ஆஹா என்றாராம்
வாய்வரை வைத்து காரத்தால
துடிச்சுபுட்டாராம்
ராஜா துடிச்சு புட்டாராம்
ரொம்பவும் துடிச்சுபுட்டாராம்
பாவம் துடுச்சுபுட்டாராம்
குட்டி குட்டி சுண்டக்கா கூட்டம்
கூட்டமா-அது
குமுஞ்சுகெடந்த
அழகபார்த்து சொக்கிபுட்டாராம்
ராசா சொக்கி புட்டாராம்
அதுல ஒரு சுண்டக்காய
அழைச்சுகிட்டாராம்
ஆவணியில் கலியாணத்த
முடிச்சுகிட்டாராம்
ராசா முடிச்சுகிட்டாராம்
ஜோரா முடிச்சுகிட்டாராம்...
பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பர பீப்பர பீ
பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பர பீப்பர பீ

எழுதியவர் : Naveen (1-Aug-12, 11:13 pm)
பார்வை : 308

மேலே