நீர்

நீர்
கள்ளங்கபடம் இல்லாமல் எங்கும் நிறைகிறாய் .......
எதையும் கரைக்கும் உருவம் கொண்டிருக்கிராய்.....

நீ என் அன்னை ஆனாய் ஒடி வந்து தாகம் தீர்க்கும் போழுது
நீ என் தந்தை ஆனாய் சமத்துவத்தை சொல்லி தரும் போழுது

நீ விண்ணில் இருந்து வருகிராயா??????
இல்லை
மண்ணில் இருந்து வருகிராயா???????
இல்லை இல்லை
வலி பெருகினால் நீ கண்ணில் இருந்தும் வருகிராய்...

மதராசமட்டினத்தில் உனக்காக நடக்குது சண்டை!!!!!!!!!!
மக்கள் அங்கு மாக்கள் ஆகுவதே
விந்தை....!!!!!!!

கோயிலோ தோத்திராமோ உனக்கு இல்லை தடை....
பூமியில் உள்ள பாதி வியாதிகளுக்கு நீயே விடை................

சிகரம் முதல் குமரி வரை நீயே
நங்கை ..........
சிவனின் உச்சியிலும் நீயே
கங்கை........

என்ன தான் சொல்லி தர நினைக்கிராய் ..............
ஒற்றுமையையா அல்ல உதவும் தன்மையையா????

எந்தனை பெயர் தான் நீயும் பெற்று
இருகிறாய்.
எங்கு சென்றாலும் அங்கு உனக்கென இடம் பிடிக்கிறாய்

நாங்கள் பிறக்கும் போழுது எங்களோடு
வருகிறாய்
தாயின் கருவரையில் இருந்து
ரத்தமாய்...................
நாங்கள் இறக்கும் போழுதும் எங்களுக்காக வருகிறாய்
துயரத்தை உணர்த்த கண்ணில் இருந்து கண்ணீராய் .................
வைஷ்ணவி

எழுதியவர் : (6-Aug-12, 8:09 pm)
Tanglish : neer
பார்வை : 162

மேலே