பொம்மை மிட்டாய்க்காரர் !
காசுகளை கையில் வைத்துக் கொண்டு
மிட்டாய் கேட்டு நின்ற
குழந்தைகளுக்கெல்லாம்
கடிகாரம், விமானம், கப்பல்
என்று வித வித உருவங்களைச்
செய்து தந்து கொண்டிருந்தார்
ஜவ்வு மிட்டாய்க்காரர் !
கொசுறாக மிட்டாயில்
கொஞ்சம் வெட்டி எடுத்து
பிள்ளைகளின் கன்னங்களில்
ஒட்டி வைத்த போது
கண்கலங்கினார்
அந்த மிட்டாய்க்காரர்!
காலையில் பள்ளிக்கு செல்ல
காலணி வேண்டும் என்று
அடம்பிடித்த மகனை
கன்னத்தில் அடித்தது
ஞாபகத்திற்கு
வந்து இருக்கலாம்
அவருக்கு !