தலைமேலே பலன் !
இடமிருந்து வலமாக
ஒரு காகமும்
வலமிருந்து இடமாக
இன்னொரு காகமும்
பறந்து போயின
எனக்கு முன்னால் !
இடமிருந்து போனால் நலம் என்றும்
வலமிருந்து போனால் இடர் என்றும்
எனது ஜோஸ்யன்
முன்பொரு முறை சொன்னது
நினைவிற்கு வந்தது !
இரண்டுகாகங்கள் ஒரே நேரத்தில்
இரண்டு புறமாக பறந்து சென்ற
இதற்கு என்ன பலன்
என்று யோசித்தபடி
என் தலையைத் தடவினேன் !
தலை மேலே பலன் கிடந்தது
காக்கையின் எச்சம் என்ற
பலன் தலை மேலே கிடந்தது !