021 -- சாதகம் செய்ய வா! தோழா!

திரு.சங்கரன் அய்யாவின் 'குழலின் இசை-1 ' என்ற பாட்டு விளைவித்த ஞானக் கவிதை. ..

மோகத் திரையைக் கிழித்தால் வருவேன்
....முன்னே நிற்பேன் தோழா!
வேகத் திரையைக் கிழித்து நீயும்
... மின்னலைத் தொடர்வாய் தோழா!
யோகத் திரையின் பின்னால் இருந்து
....யூகம் கடப்போம் தோழா!
சாகும் நினைப்பே இல்லா வாழ்வைச்
.... சாதகம் செய்வோம் தோழா!


எங்கும் மறைந்து போய்விட வில்லை!
...என்றும் இருக்கிறேன் தோழா!
தங்கும் வானில், தவழும் காற்றில்
.... தண்ணெனும் நீரில் மண்ணில்
மங்காத் துடிப்பாய், மரணம் கடந்த
.... மயக்காய் உனக்குள் நானே
எங்கும் ஒளியாய் இன்னிசை ஒலியாய்
.... இருப்பவன் தானே! தோழா!...
-௦-

எழுதியவர் : வசந்திமணாளன் (9-Aug-12, 7:13 am)
பார்வை : 187

மேலே