கல்லும் கடவுளும்
கல்லும் கடவுளும்
=============================ருத்ரா
எனக்கு நீயா?
உனக்கு நானா?
இரண்டும்
கேள்விகள் எறிந்து கொண்டன
ஒன்றின் மீது
இன்னொன்றாய்.
விடைகள் தான்
இரண்டுக்கும்
கிடைக்கவில்லை.
இருப்பினும்
அர்ச்சனைகள் தொடர்ந்தன.
ஒன்று உருவம் என்றது.
இன்னொன்று அருவம் என்றது.
ஒன்று மந்திரம் என்றது.
இன்னொன்று தந்திரம் என்றது.
கல்லை உடைத்தால்
தெரியும்.
கடவுளை உணர்ந்தால்
தெரியும்.
கல்லை உடைத்தபோது
கடவுள் மறந்து போனது.
கடவுளை உணர்ந்தபோது
கல்லும் மறைந்து போனது.
கல்லுக்கும்
கடவுளுக்கும் இடையே
அர்த்தம் சொல்ல வந்தான்
மனிதன்!
=================================ருத்ரா