எப்படி வரும் பாசம்

பால்மணம் மாறாத
பாலகனும்
வீட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு
விடுதியில்
விடப்பட்டால்...
பாட்டியின்
கதைகேளாமல்
இளம் பருவத்தில்
வளர்க்கப்பட்டால்.
பருவம் வரும்
போழ்தினில்
பெற்றோர்கள்
சண்டையிட்டால்,.
தான் பெற்ற
பிள்ளையின்முன்
தன்னைப்பெற்றோரையும்
தலைமுழுகிவிடும்
தறிகெட்ட மாந்தருக்கு
பிறந்த பிள்ளைகளிடம்...
எப்படி வரும் பாசம்...

எழுதியவர் : தே பிரபு (11-Aug-12, 1:17 pm)
சேர்த்தது : பிரபு தே
பார்வை : 135

மேலே