நெருப்பள்ளிக்கொட்டும் வெயில்.

உருகி வழிகிறது உசிர்
கடைசி மூச்சை இருகப்பிடித்திருக்கும்
கட்டாயத்தில் மனிதம்
போறணையில் போட்ட பாணாய்
பொங்கி அவிகிறதுதேகம்.

என்ரவாப்பா இது என்ன வெயிலப்பா
வேம்பிப்பளுக்கிறதும்,கொட்டுண்டுபோகிறதும்
இங்கதான்கூட இந்த மயிர்.
வேண்டாம் தம்பி இந்த வெளிநாட்டு மோகம்.

போகணும் அடுத்த ஜூனுக்கிடையில்
மிக அவசரமாய் போகணும்
ஊரை நினைக்கையில் ஒப்பாரி வைக்கிறது மனசு
சீ...என்ன வேக்காடு,கண்கெட்டு ஊத்துண்ணும் சூடு.

நாசமத்த காலம் ஏன்தான் சூரியனை
தொண்டைக்குள் இறக்கி வைத்திருக்கிறதோ தெரியாது.
விழுங்கி சாகடிக்கவேண்டியதுதானே
உலகத்தை ஒரு நொடிப்பொழுதில்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (11-Aug-12, 5:05 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 187

மேலே