நண்பன்

ஆயிரம் உறவுகள் வந்தும் போனது
வந்ததும் போனது
ஆனால்
என் நண்பனின் உறவு மட்டும்
நான் இறந்தால் மட்டுமே போகும்...

உறவுகள் என்னை சுமந்து பிறகு
சுமையாகக் கருதி இறக்கி வைத்து விட்டது
ஆனால்
என் நண்பன் அவனது இதயத்தில் விரும்பி
என்னை சுமையாக்கி கொண்டதால்
அவனே நினைத்தும் இறக்கி வைக்க
முடியாமல் இன்று வரை சுகமாக
சுமக்கிறான்...

நாங்கள் அதிகமாக பேசுவதற்கு
வாய்ப்புகள் மிகக் குறைவு
ஆனால்
எங்கள் நட்பின் இடையில்
சிறு இடைவெளிக்காக
சிறிய வாய்ப்புகள் கூட தரவில்லை...

என் உறவினும் மேலான
உன்னத நண்பன் என்றும்
வாழ்க நலமுடன்....

எழுதியவர் : ----ம.அன்பழகன்----- (12-Aug-12, 8:35 am)
Tanglish : nanban
பார்வை : 138

மேலே