அம்மா

ஈன்றெடுத்த நாள் முதல்
பூவைப் போன்றெண்ணியதால்
காற்றுப் பட்டால் பூவின் இதழ்கள்
சற்று சிலிர்க்குமோ அதனால்
பூவின் உறக்கம் சிதறுமோ
என எண்ணி பட்டும் படாமலும்
பூவிற்கு உணர்த்தாமலும்
சேலையை மூலப் பொருளாகக் கொண்டு
தூய்மையே சற்று தூரம் போக நினைக்கும்
என்னவளின் அழகான கரங்களால்
பின்னிய அன்பு வலையிலிருந்து
மீள முடியாமல் சுகம் தாள முடியாமல்
சுகமே சற்று சலித்துப் போகும் அளவிற்கு
ஒவ்வொரு நொடிப் பொழுதும்
பல்லாயிரம் சுகங்களை
உன்னால் அனுபவிக்கும்
உன் வாழ்நாள் கடன் பட்டவன்...


இந்த வரிகள் அனைத்தும் என்
அன்பு அம்மாவிற்காக...

எழுதியவர் : ம.அன்பழகன்... (14-Aug-12, 4:25 pm)
Tanglish : amma
பார்வை : 174

மேலே